பொதுமக்கள் கடும் அவதி லால்குடி அருகே புதிதாக திறந்த டாஸ்மாக்கை மூடக்கோரி திடீர் சாலைமறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
லால்குடி, ஆக.18: லால்குடி அருகே செங்கரையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லால்குடி அடுத்த செங்கரையூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று அரியூர், பூண்டி, செங்கரையூர், கல்விக்குடி, பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு லால்குடி-திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.



