திருச்சி, ஆக.18: திருச்சி மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதிய நேரங்களில் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் வெளியில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வீடுகளிலும் இரவு நேரம் வரை வெப்பம் குறையாமல் இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
+
Advertisement



