திருச்சி, ஆக.17: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரிய மிளகுபாறை அருகில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் புகுந்து, ஆலயத்தில் இருந்த சுமார் 5 உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள மாதாகெபி, ஆலயத்தின் உட்புறத்திலும் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை ஆலயப் பணியாளர் ஒருவர் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜிக்கு தகவல் தெரிவித்தார்.
+
Advertisement



