Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ வீட்டில் 9 பவுன் திருட்டு

திருச்சி, ஆக.17: திருச்சி கருமண்டபம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வெ பெற்ற எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணியன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மலர்விழி (54). இவர் ஆக.12ம் தேதி திருப்பூர் உடுமலைப்பேட்டையிலுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் ஆக.15ம் தேதி காலை மலர்விழியின் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனை கண்ட பக்கத்து வீட்டார் உடனே மலர்விழிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மலர்விழி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மலர்விழி அளித்த புகாரின் பேரில், கண்டோன்மெண்ட் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்