Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்கா விற்ற 4 பேர் கைது

திருச்சி, ஜூன் 15:குட்கா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கண்டோன்மென்ட், உறையூர், ரங்கம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூன் 13ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சாவூர் சர்வீஸ் சாலை அருகே குட்கா விற்ற அரியமங்கலம் குமரன் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (31) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல கிராப்பட்டி சர்ச் அருகே குட்கா விற்ற கிராப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (29) என்பவரை எடமலைப்பட்டி புதுார் போலீசார் கைது செய்தனர். மல்லிகைபுரம் பகுதியில் குட்கா விற்ற திருவானைக்கோவிலை சேர்ந்த கார்த்திக் ராஜா (49), புத்தூர் நால்ரோடு அருகே குட்கா விற்ற உய்யகொண்டான் திருமலை கொடாப்பு சாலையை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த 330 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.