Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆன்லைனில் ரூ.2.91 லட்சம் மோசடி

திருச்சி, ஆக.12:திருச்சியில் ஆன்லைனில் ரூ.2.91 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி ஜேகே நகர் அமராவதி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (48), இவர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவர் சுப்பிரமணியபுரம் கிளையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கணக்கு துவங்கி பராமரித்து வருகிறார்.

இதனையடுத்து ஏப்.8ம் தேதி தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றார். அப்போது கணக்கில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரணை செய்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரது கணக்கிலிருந்து ரூ.2.91 லட்சத்தை ஆன்லைன் மூலம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ் ஆன்லைனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.