திருச்சி, ஆக.10: திருச்சியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி பீமநகர் பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.8ம் தேதி பாலக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பீமநகர் கோரிமேடு அருகே லாட்டரி விற்ற குளித்தலை நடுப்பட்டிப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து லாட்டரி, 1 செல்போன், 1 டூவீலர் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement



