திருச்சி,ஆக.10: திருச்சி திருவானைக்கோவில் டிரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(50). இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மதிவாணன் (37) என்பவர் கோயம்புத்தூரில் ‘உழவன் காய்கறி கடை’ நடத்தி வருவதாகவும் தொழில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறினார். இவரது ஆசை வார்த்தைகளை நம்பிய ஆதிமூலம், கடந்த 2024,2025 வருடம் ரூ.11.70 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.பணத்தைப் பெற்றுக்கொண்ட மதிவாணன், லாப பணத்தையோ அல்லது முதலீட்டையோ திரும்பத் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து மதிவாணனை கைது செய்தனர்.
+
Advertisement



