Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

திருச்சி, ஆக.10:திருச்சியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.8ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கிலியாண்டபுரம் அருகே டூவீலரில் பதுக்கி வைத்து மதுவிற்ற சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நவலடியான் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 35 மது பாட்டில்கள் மற்றும் 1 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.