திருச்சி, செப்.8: திருச்சி விற்பனைக்குழு கீழுள்ள கடைகளுக்கான வாடகை நிலுவையை கட்டாவிட்டால் உரிமம் ரத்தாகும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். திருச்சி விற்பனைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் கள்ளிக்குடி காய்கறிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான மத்திய வணிக வளாகத்திலுள்ள கடைகளுக்கு ஏப்ரல்-2023 முதல் வாடகைக்கு பெற்ற வணிகா்கள் பலமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டும், தொடா்ந்து நிலுவை வாடகை மற்றும் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனா்.
வாடகை தொகை செலுத்தாதவர்கள் வாடகை கட்டவில்லை எனில், தமிழ்நாடு பொது வளாகங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சட்டம் 1975ன்படி, நாளைக்குள் நிலுவைத்தொகை செலுத்தாமல் உள்ள கடைகளை திருச்சி விற்பனைக்குழு வசம் கையகப்படுத்தப்பட்டு, மறு அறிவிப்பின்றி ரத்து செய்து, வேறு நபா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


