Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி அரசு மருத்துவமனையில் விஷம் அருந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

திருச்சி, ஜூன் 8: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்மணிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் 3வது முறையாக கர்ப்பமானார். இந்நிலையில் மார்ச் 31 ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக விஷம் அருந்தினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஷத்தின் வீரியம் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நினைவாற்றலில் மந்தநிலை ஏற்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும் உடல்நிலை மோசமான நிலையில் அவர் 28 வார பெண் குழந்தையை இறந்த நிலையில் பிரசவித்தார். பூச்சிக்கொல்லி விஷத்தின் பக்கவிளைவான இன்டர்மீடியேட் சின்ட்ரோம் என்னும் நிலைக்கு சென்ற அந்நோயாளிக்கு தொடர் செயற்கை சுவாசம் அளிப்பதற்காக டர்க்யாஷ்டமி என்னும் சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கிடையில் அவருக்கு நுரையீரலில் கடும் கிருமி தொற்று மற்றும் தாதுசத்து குறைபாடு ஏற்பட்ட நிலையில், அவரை செயற்கை சுவாசத்திலிருந்து வெளிக் கொண்டு வர மிகவும் சிரமமாக இருந்தது. அதற்காக அவருக்கு உயர் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உடனுக்குடன் அளித்ததால் அவரது கிருமி தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் செயற்கை சுவாசக்கருவி உதவியின்றி தானாக சுவாசிக்கும் நிலைக்கு அவர் உடல்நிலை சீரானது. அரசு மருத்துவமனை டீன் குமரவேல் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் உதயஅருணா, துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தக்க நேரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தனர்.

பொது மருத்துவம் மற்றும் அதை சார்ந்த மருத்துவ ஸ்பெஷாலிட்டி நிபுணர்களின் அயரா உழைப்பினாலும் தீவிர சிகிச்சை காரணமாக 35 நாட்கள் தீவிர சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினார்.

பழைய நாடகமா

‘மீண்டும், மீண்டும் சர்வே பணிகள் என புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனரா? அல்லது இது அதே பழைய நாடகமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. 2026ல் மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க காரணம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் புதிய சர்வே பணிகளை தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்களே.