Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் `கியூ’ பாதையில் மின் விசிறி அமைக்க பக்தர்கள் கோரிக்கை

சமயபுரம், செப்.7: புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வெயில் மற்றும் காற்றோட்ட குறைவு காரணமாக, வரிசையில் நிற்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்படும் சூழலும் உருவாகிறது. எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் காத்திருக்கும் ராம்ப் (சறுக்கு) பாதையில் வரிசையில் போதிய எண்ணிக்கையிலான மின் விசிறிகள் அமைத்துத் தருமாறு தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் பெண் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.