Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

முன்விரோத தகராறு:  வாலிபருக்கு உருட்டுக்கட்டை அடி

திருவெறும்பூர், செப்.7: திருவெறும்பூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவெறும்பூர் மலைகோவில் செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (29). இவர் இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சிந்து என்பவரை கடந்த 8 மாதத்திற்கு முன் காதலித்து, சிந்து குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேம்குமார் சிந்துவின் வீட்டிற்கு மது போதையில் சென்று சிந்துவின் தம்பியான சஞ்சயை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார்.

இதில் இருவரும் அருகில் கடந்த கட்டைகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரேம் குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரேம் குமாரோடு சென்ற மாலை கோவில் இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் (44) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது சம்பந்தமாக பிரேம்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.