திருச்சி, ஆக.7: விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்த தடையாகவுள்ள கனிமவளத்துறையை கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவானைக்காவலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பகுதிச் செயலாளர் வீரமுத்து தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முகமது அலி, மாநகர் மாவட்டத் தலைவர் பாண்டியன், மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் தனபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்த தடையாகவுள்ள கனிமவளத்துறையை கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், செங்கல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கனிமவளத் துறையின் செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



