சமயபுரம்,ஆக.7: மண்ணச்சநல்லூர் பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் பாலமுருகன் சுவாமிக்கு 11 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அவர் அருள்பாலித்தார். உற்சவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement



