மணப்பாறை, ஆக, 7: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தவளைவீரன்பட்டி கிராமம், கரட்டுப்பட்டியில் முள் காட்டிற்குள் கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில்களை கரட்டுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் இளையராஜா(37) மற்றும் கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த முள்ளிபாடியை சேர்ந்த வடிவேல் மகன் குமார்(40) ஆகியோர் விற்பனை செய்த போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிந்த வையம்பட்டி போலீஸார், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement




