Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உயிர்சேதம் தவிர்ப்பு; புளியமரம் முறிந்து தொழிலாளி படுகாயம்

முசிறி , ஜூலை 6: திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (37). செங்கல் சூளை தொழிலாளி. நேற்று மதியம் மாதேஸ்வரன் தனது டூவீலருடன் செவந்தலிங்கபுரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதில், சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மாதேஸ்வரன் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய மாதேஸ்வரன், மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கி காலில் பலத்த காயமடைந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாதேஸ்வரனுக்கு குணவதி என்ற மனைவியும், சர்வேஸ்வரன் (4) என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து முசிறி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.