திருச்சி, டிச.3: ஜமால் முகமது கல்லூரி ஆயிஷா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச. 1 அன்று SparkFest நடைபெற்றது. இவ்விழாவை முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் இணைந்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் மாணவிகள் பலதரப்பட்ட உணவு வகைகள், மகளிர் ஆடை அலங்காரப் பொருட்கள், அரபிக் மற்றும் தீனியாத் மார்க்க கல்வி முறைகள், அறிவியல் படைப்புகள், விளையாட்டு படைப்புகள் மற்றும் சாதனைகள், புத்தகங்கள் ஆகியவைகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தினர். கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் காஜா நஜிமுதீன்,பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது, துணைச் செயலாளர் முனைவர் அப்துல் சமது, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் முனைவர் அப்துல் காதர் நிஹால், கல்வி மேம்பாட்டு இயக்குனர் முனைவர் இஸ்மாயில் முகைதீன், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரெத்தினம், பள்ளி முதல்வர் காருண்யா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவிகளை பாராட்டி Spark Fest விழா மாணவிகளின் கல்வித்திறனுடன் மதக் கல்வி மற்றும் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது.விழாவில் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.
+
Advertisement

