துறையூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
துறையூர், டிச.3: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் டிச.1 முதல் வழக்குகள், வழக்கிடை மனுக்கள், ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் இ-பைலிங் முறையில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக கூறினர். இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக் கோரி டிச.2 முதல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட கேட்டு கொண்டது.அதன்படி துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று டிச.2 முதல் டிச. 6 வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். அதைதொடர்ந்து சங்க செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் நரேஷ்குமார், துணைத்தலைவர் பாஸ்கரன், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் விலகியிருந்தனர்.