Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்தவர் கைது

திருச்சி, நவ.3: திருச்சி ரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). அக்.31ம் தேதி தெப்பக்குளம் வடக்குப்பகுதி படித்துறை அருகே இவரது மகன் கிஷோர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், பார்த்தசாரதி யார்? என கேட்டு விசாரித்தனர். அதற்கு தனக்குத் தெரியாது என கூறியதால், ஆத்திரமடைந்த கும்பல் கிஷோரை கத்தியால் குத்தினர்.

மேலும் அவரிடமிருந்த ரூ.2,000 பணத்தை பறித்து சென்றனர். இதில் கிஷோரின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து ரங்கம் பகுதியை சேர்ந்த ரத்னவேல் (18) என்பவரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஹரிசங்கர்(19), ஐயப்பன் மற்றும் ஒரு நபர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.