Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முசிறியில் மதுபாட்டில் கிடைக்காததால் சாலையில் படுத்து உருண்டு; மதுபிரியர்கள் போராட்டம்

முசிறி, நவ.3: முசிறியில் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் கடை முன்பு மதுப்பிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-நாமக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முசிறியில் இயங்கி வரும் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகளும் நேற்று திறக்கப்படாததால், 11 முதல் 11 வரை இயங்கும் தனியார் மதுபானக் கடை முன்பு மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்குவதற்காக பெருமளவில் குவிந்தனர். தனியார் கடையில் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்ததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள், கடையை முற்றுகையிட்டு திருச்சி - நாமக்கல் சாலையில் குறுக்கே படுத்து உருண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியல் காரணமாக திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த முசிறி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.