Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

லாட்டரி விற்ற 2 பேர் கைது

திருச்சி, ஆக.3: திருச்சியில் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்திமாா்கெட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் ஆக.1ம் தேதி அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகனேரி பகுதி அருகே லாட்டரி விற்ற சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவைச் சேர்ந்த ராஜூ(71) என்ற முதியவரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோன்று உறையூர் பாண்டமங்கலம் அருகே லாட்டரி விற்ற உறையூர் வடிவேல் நகரைச் சேர்ந்த முருகேசன்(53) என்பவரை உறையூர் போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி, ரூ.250 பணம், 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.