Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

முசிறி, நவ.2: முசிறியிலிருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள நாகம்பட்டி பள்ளம் மழைநீர் வாய்க்கால் பாலத்தின் நடுப்பகுதியில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, ஜல்லி மற்றும் கற்கள் வெளியே தெரிந்து மிகவும் சேதமடைந்துள்ளது. இப்பாலம் வழியாக அரசு, தனியார் பேருந்துகள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் தினசரி இயக்கப்படுகின்றன. பாலத்தின் தற்போதைய பழுது காரணமாக, நிலைமையை அறியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, பெரும் விபத்துகள் நேர்வதற்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாகத் தலையிட்டு சேதமடைந்த பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.