தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்; திருச்சி உழவர் சந்தைகளில்; இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை சந்தை அறிமுகம்
திருச்சி, நவ.2: திருச்சி மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சந்தைப்படுத்துவதற்கான துவக்க விழா நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரத்திக்தாயள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026-27ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சந்தைப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது.
அதைத்தொடா்ந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நேற்று திருச்சி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளைபொருட்களின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இயற்கை விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் தங்கள் விளைபொருட்களை திருச்சி மாவட்டத்திலுள்ள அண்ணாநகா், கே.கே.நகா், துறையூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, லால்குடி மற்றும் துவாக்குடி, திருவெறும்பூர் ஆகிய உழவர் சந்தைகளில் ஞாயிற்றுகிழமையிலும் விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய மற்றும் இயற்கை அரிசி வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பயறுகள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், மஞ்சள், மிளகு மற்றும் பிற மசாலாப் பொருட்கள், நாட்டுக்கோழி முட்டைகள், தேன் மற்றும் NPOP PGS அல்லது இயற்கை வேளாண்மை முறைகளின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட, இயற்கை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய தகுதியான விளைபொருட்களாகும். எனவே, இயற்கை வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சியில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மண்ணச்சநல்லூர் அருகே


