திருச்சி, அக். 2: சென்னை பழைய பெருங்களத்தூர், சொர்க்கம் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (36). இவர் கடந்த 27ம் தேதி காலை தனது குடும்பத்தினருடன் சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையம் நடைமேடை எண் 4ல் வந்திறங்கினார். அப்போது தனது கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது. அதில் 2 விவோ ஸ்மார்ட்போன்கள், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் 1 பவுன் கைச் செயின் இருந்தன. இதுகுறித்து புகாரின் பேரில், திருச்சி ரயில்வே எஸ்ஐ கவிதா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை விராலிமலை ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, பக்கிரிவாடி தெருவைச் சேர்ந்த ஆதில்முகமது (26) என்பதும், திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ்செல்வனின் பையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆதில் முகமதுவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

