திருச்சி, அக்.2: இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தவெக அரசு மாற்றம் தருவதாக அமைந்தது. ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சூழல் இருந்தது. தற்போது எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கூடம் செல்லக்கூடிய மாணவி கூட்டு பலாத்காரம் செய்யும் அளவிற்கு தமிழகத்தின் நிலை உள்ளது. கடந்த ஆட்சியில் குற்றங்கள் இருந்தது, நாங்கள் ஆட்சி அமைத்தால் 100 நாட்களில் எந்த குற்றமும் தமிழ்நாட்டில் இருக்காது என்றார்கள். ஆனால் கடந்த கால ஆட்சிகளை விட அதிக அளவு குற்றங்கள் நடந்து வருகிறது.

