திருச்சி, அக்.2: திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிராவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு கடந்த 30ம் தேதி தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, அங்கு விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த முதலியார் சத்திரத்தை சேர்ந்த பிரகாஷ்(27), பாலக்கரையை சேர்ந்த காட்வின் பிரபாகரன்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement

