Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கூலி உயர்வு கேட்டு 2வது நாளாக காகித ஆலை தொழிலாளர்கள் போராட்டம்

மணப்பாறை, ஜூலை 1: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித ஆலை தொழிலாளர்கள் 2வது நாளாக பணி புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை(அலகு-2)யில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருந்தோறும் அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை நிகழாண்டு உயர்த்தப்படவில்லையாம். மேலும் ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ள அடிப்படை சம்பளம் தரப்படும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு பணிக்கு செல்லவேண்டிய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பணியினை புறக்கணித்து ஆலைக்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன், ஆலை துணை பொதுமேலாளர் வேல்முருகராஜ், மனிதவள மேலாளர் நாகராஜன் தாசில்தார் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் தொழிலாளர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் சமரசத்தை ஏற்காத தொழிலாளர்கள் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் 2-வது நாளாக பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஆலை நிர்வாகமும், வருவாய்த்துறை ஆர்டிஓ, போலீஸ், தொழிலாளர் நலத்துறையினர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்தும், தொழிலாளர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.