மண்டபம், மார்ச் 15: மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சத்யா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி மற்றும் கிராம உதவியாளர்கள் நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வேதாளை கிராம சாலையில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


