கண்டியப்பேரி உழவர் சந்தை நெல்லை, ஜூன் 19: டவுன் மற்றும் பேட்டை பகுதி மக்களின் நலன் கருதி கண்டியப்பேரி உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி, தாங்களே விற்பனை செய்யும் வகையில் திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உழவர் சந்தை திட்டத்தை செயல்படுத்தினார். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் விலை பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்தனர்.
+
Advertisement


