Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு; ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை..!!

நெல்லை, நவ. 3: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று பொது மக்கள், சிறுவர்கள் பட்டாசு வெடித்து உற்சாக பண்டிகையை கொண்டாடுவர். இந்நிலையில் இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் கூறியிருப்பதாவது: பட்டாசுகளை ரயில் மூலம் எடுத்துச் சென்றால் தீ விபத்து ஏற்பட்டு பயணிகளுக்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல ஏற்ெகனவே தடை அமலில் உள்ளது. இந்தத் தடையை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்.

தீ விபத்து, அதை தொடர்ந்து ஏற்படும் நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், பார்சல் பதிவு அலுவலகம் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பயணிகளிடம் பட்டாசு, மண்ணெண்ணெய், எரிவாயு உருளைகள், பெட்ரோல், அமிலங்கள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் மைக் மூலம் அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விதிகளை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது கடும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே பயணிகள் தங்கள் சொந்த பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.

இவ்வாறு மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.