தியாகராஜ நகர், நவ. 2: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் மாதத்திற்கான மின் குறைகள் தீர்க்கும் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தென்னரசு வௌியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் மாதத்திற்கான மின் குறைதீர்க்கும் கூட்டங்களை தேதி வாரியாக நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (3ம் தேதி) செவ்வாய்க்கிழமை தென்காசி கோட்ட அலுவலகத்திலும், நவ.6ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும் நவ. 10ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் நவம்பர் மாதத்திற்கான மின் குறைகளை தீர்ப்பதற்கான கூட்டம் நடைபெறும்.
இதேபோல் இம்மாதம் 13ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், வரும் 17ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், இம்மாதம் 20ம் தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், அதைத்தொடர்ந்து நவ. 24ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் மின் குறைகளை தீர்ப்பதற்கான கூட்டங்கள் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் குறிப்பிட்ட நாட்களில் முற்பகல் 11 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


