Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவாரூரில் வாராந்திர குறைதீர் கூட்டம் 450 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

திருவாரூர், டிச. 23: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 450 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 450 மனுக்களை பொது மக்கள்அளித்தனர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சதீஸ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தையல்நாயகி, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லபாண்டி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அமுதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.