Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயிலில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி

ஆரணி, செப்.30: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் ஆரணி-கண்ணமங்கலம் ரயில் பாதை உள்ளது. இந்நிலையில் நேற்று ரயில்வே தண்டவாளம் அருகில் வாலிபர் சடலம் ரயில் சிக்கி பலியாகி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமம் ராமசாணிகுப்பம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலாஜி(31), என்பது தெரியவந்தது.

இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டாகும் நிலையில், இன்னும் குழந்தைகள் இல்லை. பாலாஜி குடும்பத்துடன் சென்னையில் தங்கி, ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி சொந்த ஊரான ஒண்ணு புரத்திற்கு வந்து குடும்பதுடன் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாரத விதமாக பாலாஜி ரயிலில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.