Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரணமல்லூர் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

பெரணமல்லூர், செப்.30: பெரணமல்லூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற வர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரணமலூர் அடுத்த மோட்சவாடி பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மனைவி இந்திராதேவி(43). இவர் தனது மகன் செய்யாறு பகுதியில் கல்லூரியில் படிப்பதால் அங்கேயே தங்கி உள்ளார்.

மேலும் மோட்சவாடி பகுதியில் உள்ள உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கமாம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்யாறில் இருந்த இந்திரா தேவிக்கு மோட்சவாடி பகுதியில் இருந்து தொலைபேசி மூலம் உங்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மோட்சவாடி திரும்பிய இந்திரா தேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டில் உள்ளே சென்று ஆராய்ந்தபோது அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ லாக்கரில் வைத்திருந்த 10 கிராம் தங்கம் மற்றும் 65 கிராம் வெள்ளி பொருட்கள் என சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்திரா தேவி பெரணமல்லூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.