வந்தவாசி, ஆக. 20: வந்தவாசி அருகே பள்ளிக்கு சென்ற 4 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசாமியை போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு அரசு விடுதியை சேர்ந்த 4 சிறுமிகள் அரசு மகளிர் பள்ளியில் 4, 5, 6ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவிகளிடம் அவ்வழியாக வந்த தேசூர் அரச மர தெருவை சேர்ந்த ஏழுமலை(48) என்பவர் 4 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் சிறுமிகள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் தேசூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார். பின்னர் கைது செய்யப்பட்ட ஏழுமலை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ஏழுமலைக்கு இன்னும் திருமணமாகவில்லை.



