Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பேருந்தும், லோடு வேனும் மோதுவதுபோல் வந்த தகராறில் பஸ் டிரைவரை பட்டாக்கத்தியால் தாக்க முயற்சி: டிரைவர் கைது

சேத்துப்பட்டு, ஆக. 19: பேருந்தும், லோடு வேனும் மோதுவதுபோல் வந்த தகராறில் பஸ் டிரைவரை பட்டாக்கத்தியால் தாக்க முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பஸ் ஒன்று சேத்துப்பட்டில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா(31) ஓட்டிச் சென்றார்.

அப்போது லோடு வேனில் வந்த நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(24), வீட்டுக்கு செல்வதற்காக வாகனத்தை வலதுபுறம் திருப்பியுள்ளார். இதில் பஸ்சும், லோடு வேனும் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், லோடு வாகனத்தில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு பஸ் டிரைவர் சிவாவை தாக்க முயன்றதுடன், பஸ் மீதும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.