Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குட்கா பறிமுதல் வழக்கில் செங்கல்பட்டு வியாபாரிகள் 2 பேர் கைது

வந்தவாசி, ஆக. 19: குட்கா பறிமுதல் வழக்கில் செங்கல்பட்டு வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் மளிகை கடையில் குட்கா பொருள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளரை கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் தலைமையிலான போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர்.

மளிகை கடையில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மளிகை கடை உரிமையாளர் ஏழுமலை மகன் ஜெயந்தன்(25) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா சோழனூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(40) மணிவண்ணன்(34) ஆகியோர் வாகனத்தில் கொண்டு வந்து விற்பனைக்காக கொடுப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கீழ்கொடுங்காலூர் போலீசார் சோழனூர் கிராமத்தில் முகாமிட்டு நேற்று அதிகாலை பாஸ்கர் மணிவண்ணன் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.