Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வந்தவாசி அருகே துணிகரம் வீட்டின் பூட்டு உடைத்து நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை

வந்தவாசி, ஆக.14: வந்தவாசி அருகே விவசாயி வீட்டின் பூட்டு உடைத்து 1 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன்(70), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாயி நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிக்கொண்டு தனது மனைவி சாந்தியுடன் மாடியின் உறங்கச்சென்றார்.

பின்னர் நேற்று காலை மாடியில் இருந்து கீழே இறங்கிவந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தர்மன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 சவரன் தங்க நகை ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தர்மன் தெள்ளார் போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் எஸ்ஐக்கள் பாபு, மாதவன் மற்றும் போலீசார் விரைந்துவந்து விசாரித்தனர். மேலும் நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.