Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முன்விரோத தகராறில் தந்தை, மகன் மீது தாக்குதல் 5 பேருக்கு வலை

ஆரணி, ஆக.13: ஆரணி அருகே முன்விரோத தகராறில் தந்தை, மகனை தாக்கிய வழக்கில் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மண்ணு(60), இவரது மகன் சங்கர்(36), விவசாயிகள். அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் சந்திரன்(45), மன்னார்(50). இவர்களுக்குள் வழித்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மன்னார், சந்திரன் இருவரும் ஜேசிபி மூலம் இடத்தை சுத்தம் செய்தனர். அப்போது, அங்கு வந்த சங்கர், அவரது தந்தை மண்ணு இருவரும், ‘எதற்காக எங்கள் இடத்தை சுத்தம் செய்கிறாய்?’ என தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சந்திரன், மன்னார் மற்றும் அவரது நண்பர்களான ஜெயபிரகாஷ், யுவராஜ், ஜேசிபி டிரைவர் பிரகாஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து தந்தை, மகனை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மண்ணு, சங்கரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன், மன்னார் உட்பட 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.