Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆரணி அருகே நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் ஷட்டரை உடைத்து பணம் திருட்டு: முகமூடி கொள்ளையர்கள் 2 பேருக்கு வலை

ஆரணி, ஆக. 13: ஆரணி அடுத்த களம்பூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(32), இவர் களம்பூர் டவுன் அண்ணா சிலை அருகில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு கடையின் ஷட்டரை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை லோகேஷ் அவரது கடைக்கு வந்துள்ளார். அப்போது, கடையின் ஷட்டர் பாதி திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றுபோது கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். அதில் முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டரை இரும்பு ராடல் உடைத்து, கடையில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து லோகேஷ் களம்பூர் காவல் நிலையத்தில் நேற்று கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.