செய்யாறு, டிச. 10: செய்யாறு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து 4 பைக்குகளுடன் பணத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உக்கல் கிராமத்தில் சுடுகாட்டு அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதேகிராமத்தை சேர்ந்த ரமேஷ்(38), பாலகிருஷ்ணன்(48), மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(27), நரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சேஷாத்திரி(26), ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4 பைக்குகள், ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


