Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களிடம் செயின் பறித்த 3 வட மாநில வாலிபர்கள் கைது

திருவண்ணாமலை, ஜூன் 8: திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் மாதம் தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி கடந்த மாதம் 30ம் தேதி மற்றும் 31ம் தேதி வைகாசி பவுர்ணமி முன்னிட்டு 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கிரிவலம் சென்ற பக்தர்களிடம் கடந்த 30ம் தேதி இரவு தொடர்ந்து 3 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.

இதுதொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தாஜ்பால்(28), லக்ஷித்(23), அமர்(24) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 சவரன் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.