Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

அடகு கடையை உடைத்து நகை, பணம் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு வலை தண்டராம்பட்டு அருகே துணிகரம்

தண்டராம்பட்டு, பிப். 4: தண்டராம்பட்டு அருகே அடகு கடையை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்ைத சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவர் அதே பகுதியில் உள்ள சங்கராபுரம் சாலையில் அடகு கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை ஆறுமுகம் வழக்கம்போல் கடையை திறக்க ெசன்றார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷெட்டர் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரிகளில் வைத்திருந்த 3 சவரன் நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆறுமுகம் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டிஎஸ்பி ராஜா, சப்-இன்ஸ்ெபக்டர் ஆகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3 மணியளவில் 2 மர்மநபர்கள் கறுப்பு உடையுடன், முகமூடி அணிந்து வந்து 2 பேர் கடையின் பூட்டு உடைக்கும் காட்சிகளும், நகை, பணத்ைத திருடி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை ேதடி வருகின்றனர்.