Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 சவரன் திருட்டு: சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

கலசபாக்கம், ஜூன் 22: கலசபாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 சவரன் நகைகளை திருடியதாக சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் சிங்காரவாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா(61). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. தற்போது நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். வசந்தாவிற்கு உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் திருவண்ணாமலை உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே வசந்தாவின் மகன் அதியமான் தாயின் வீட்டிற்கு வந்துபார்த்தபோது திருட்டு போனது தெரியவந்தது. உடனே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.