Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சேத்துப்பட்டு அருகே கணவருடன் தகராறு மனைவி மாயம்

சேத்துப்பட்டு, ஜூலை 31: சேத்துப்பட்டு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனைவி மாயமானார். சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசவுந்தர்யா(33). இவரது கணவர் கந்தசாமி, தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஞானசவுந்தர்யா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம். இதையடுத்து ஞானசவுந்தர்யாவின் தாய் வள்ளி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.