Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

19 கிலோ குட்கா பறிமுதல் மாமன், மைத்துனர் கைது

சேத்துப்பட்டு, ஜூலை 28: சேத்துப்பட்டு, பழம்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பழம்பேட்டையை சேர்ந்த ராஜி(30), தனது வீட்டில் அவரது மாமா சுரேஷ்(46) என்பவருடன் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.