Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கலசபாக்கம் அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கலசப்பாக்கம், ஆக. 26: கலசப்பாக்கம் அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். கலசப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வண்டல் மண் டிராக்டர், லாரிகளில் கடத்தி செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் வண்டல் மண் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆரணி ஆர்டிஓ சிவா திருவண்ணாமலையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்பள்ளிப்பட்டு ஏரியிலிருந்து வண்டல் மண் அள்ளி செல்வதை பார்த்த ஆர்டிஓ, இதுதொடர்பாக கலசப்பாக்கம் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வருவாய்த்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது வண்டல் மண் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தனர். அதில் டிராக்டரை ஓட்டி வந்தவர் சாலையனூரை சேர்ந்த சுரேஷ் என்பதும், அனுமதியின்றி மண் அள்ளி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வருவாய் துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்தனர். சுரேஷை கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.