Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் நாளை ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்: தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகள்

திருவண்ணாமலை, ஆக. 26: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல நாளை வரும் (27ம் தேதி) உகந்தநாள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதையொட்டி, தரிசனத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (27ம் தேதி) காலை 9.53 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் (28ம் தேதி) காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு வழக்கத்தைவிட கூடுதலான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், காட்பாடி மற்றும் விழுப்புரம் வழித்தடங்களில் பவுர்ணமி சிறப்புகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றது. இந்நிலையில், பவுர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் வந்தனா கார்க் ஆய்வு நடத்தினர்.

அப்போது, பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும், தற்காலிக பஸ் நிலையங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.