Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டராம்பட்டு அருகே சோகம்: கிணற்றில் மண் அள்ளிக்கொண்டிருந்தபோது இரும்பு ரோப் அறுந்து விழுந்து ஜேசிபி ஓட்டுனர் பரிதாப பலி

தண்டராம்பட்டு, மே 26: தண்டராம்பட்டு அருகே கிணற்றில் மண் அள்ளிக்கொண்டிருந்தபோது இரும்பு ரோப் அறுந்து விழுந்து ஜேசிபி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டராம்பட்டு அடுத்த புதூர் செக்கடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதியதாக திறந்த வெளி கிணறு ஜேசிபி மூலம் வெட்டி வைத்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(28) டிரைவர்.

இவரது சித்தப்பா மகன் பரமசிவம்(25) இருவரும் கிணற்றிலிருந்து மண் அள்ளி எடுத்து கொண்டிருந்தனர். மண் வேலை முடிந்த பின்னர் சின்ன ஜேசிபி மூலம் இரும்பு ரோப் கயிறு கட்டி வெளியே எடுத்தபொழுது ரோப் அறுத்து கிணற்றுக்குள் விழுந்ததில் டிரைவர் அஜித் குமார் உடல் நசுங்கி பலியானார். உடன் வந்த பரமசிவம் பலத்த காயமடைந்தார். அஜித் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்,

பரமசிவம் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, எஸ்ஜ ஆகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த அஜித்குமாருக்கு மனைவி ஜெயந்தி, இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.